தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி தற்காலிக சட்டப்பேரவையான கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, விதிமுறைகளை மீறி சட்டப்பேரவை அரங்கில் செல்போனில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் செல்போனில் பேசிய டிஆர்பி ராஜா! - சட்டப்பேரவை உறுப்பினர்
சென்னை: சட்டப்பேரவை அரங்கத்துக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதியையும் மீறி, மன்னார்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா செல்போன் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
DRP Raja talking on cell phone in the legislature!
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், சட்டப்பேரவைக்குள்ளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதால், அரங்கத்திற்கு வெளியே உள்ள லாக்கரில் செல்போனை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2011ஆம் ஆண்டு பேரவை நிகழ்வின்போது செல்போனில் வீடியோ எடுத்ததால், டி.ஆர்.பி.ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.