தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்றுகொண்டிருக்கும் வேகமும் அதிகம் - திராவிட மாடல் குறித்து  முதலமைச்சர் வாழ்த்து! - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தொகுக்கப்பட்ட “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு ” என்ற நூலினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்றுகொண்டிருக்கும் வேகமும் அதிகம் - திராவிட மாடல் அரசு  இதழில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி…
சென்றுகொண்டிருக்கும் வேகமும் அதிகம் - திராவிட மாடல் அரசு இதழில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி…

By

Published : May 11, 2022, 7:17 PM IST

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.5.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தொகுக்கப்பட்ட “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற நூலினை வெளியிட, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

உடன் தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் உடன் உள்ளனர்.

சென்றுகொண்டிருக்கும் வேகமும் அதிகம் - திராவிட மாடல் அரசு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச்செய்தி…
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அந்நூல் பற்றிய தனது வாழ்த்துச்செய்தியில், “ இந்த ஓராண்டு காலம் என்பது எனக்கு மனநிறைவை அளித்துள்ளது. இன்னும் சொன்னால் அதிகமான மனநிறைவை அளித்துள்ளது. செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதே நேரத்தில் சென்று கொண்டிருக்கும் வேகமும் அதிகம். இந்த சிறப்பிதழின் கட்டுரையாளர்கள் அதனைத்தான் சொல்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details