தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமதாஸுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த தருமபுரி திமுக எம்.பி.!

வன்னியர்கள் பற்றி ஸ்டாலின் பேசியதற்கு விமர்சனம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்.

தருமபுரி திமுக எம்.பி

By

Published : Oct 9, 2019, 7:02 AM IST

வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை திமுகதான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலினுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

1. வன்னியர் சங்கம் இடஒதுக்கீடு கேட்டு போராடியபோது, வன்னியர் உட்பட 107 சாதியினருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20% இடஒதுக்கீடு கொடுத்தது யார்?

2. அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது யார்?

3. சட்டமன்றத்தில் வன்னியர்களை மரம் வெட்டிகள் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இல்லை வன்னியர்கள் இடஒதுக்கீடு போராளிகள் என்று முழங்கியது யார்?

4. வன்னியர் சமுதாயத் தலைவர் ராமசாமி படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைத்தது யார்?

5. மாமல்லபுரம் கலவரத்தில் சுமார் 8 ஆயிரம் வன்னியர்கள் மீது வழக்குப் போட்டது யார்? என்பவை உள்ளிட்ட 15 கேள்விகளை திமுக எம்.பி.செந்தில்குமார் எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் வன்னியர்களுக்கு திமுக செய்த நன்மைகளை பட்டியலிடும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: 'வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details