சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கே உறங்கிக் கொண்டிருந்த நாயினை கவனிக்காத தொழிலாளர்கள் நாயின் வலது கால் மற்றும் வால் பகுதியையும் சேர்த்து சிமெண்ட் கலவையை ஊற்றியுள்ளனர். இதனால் நகர முடியாமல் தவித்த அந்த நாய், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
'சாலை பணியின்போது நாயையும் சேர்த்து புதைத்த தொழிலாளர்கள்'
சென்னை: சாலை அமைக்கும்போது நாயையும் சேர்த்து தார் ஊற்றி புதைத்த சம்பவம் கோட்டூர்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்து கிடக்கும் நாயை மீட்கும் விலங்கு நல அமைப்பினர்
இதைப் பார்த்த அப்பகுதியினர் சமூக விலங்கு நல அமைப்பு (blue cross) அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த விலங்குநல அமைப்பினர் சாலையில் இறந்து கிடந்த நாயின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.