சென்னை ஆவடி மொரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவருக்கு 9 வயதில் விஷ்ணு என்ற மகன் உள்ளார். இவர் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை விஷ்ணுவை அவரது பெற்றோர் தெரு முனையில் உள்ள கடைக்கு அனுப்பியுள்ளனனர். விஷ்ணு தெருவில் நடந்துசென்றபோது, அதே பகுதியில் இருக்கும் வளர்ப்பு நாய் ஒன்று (ராட் வில்லர் வகை) வேகமாக ஓடிவந்து அவரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியை கொடூரமாகக் கடித்துள்ளது.
கடைக்குச் சென்ற சிறுவனின் கழுத்தைக் கடித்துக் குதறிய நாய்! - dog bite
சென்னை: கடைக்குச் சென்ற சிறுவனை, நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலியில் அலறிய அவரின் சத்தம் கேட்டு நாயின் உரிமையாளரான குமார் (47) நாயை இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் படுகாயமடைந்த விஷ்ணுவை பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து சிறுவன் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாயின் உரிமையாளர் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நாய் மனிதனைக் கடித்து கொல்லும் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.