சென்னை: நாமக்கல்லை சேர்ந்த ஞானசேகரன் - சுதா தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தை சரிஹாசினி.
கடந்த மாதம் குழந்தை சரிஹாசினிக்கு காய்ச்சல் ஏற்படவே, நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்று உள்ளனர். குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட இரண்டாவது நாள் தாயுக்கும், குழந்தைக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. பரிசோதனையின் முடிவில், இருவருக்குமே தொற்று உறுதியானது.
திடீரென குழந்தையின் இரண்டு கால்களும் செயல் இழந்தன. எந்தவித அசைவுகளும் இல்லாததை உணர்ந்த மருத்துவர்கள், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கரோனா தொற்றால் அரிதாக பாதிக்கக்கூடிய குலியன் பார் (Guillain barre) என்ற நோயால் குழந்தைக்கு இரண்டு கால்களும் செயல் இழந்திருப்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர்.