தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா சிகிச்சைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்' - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்

சென்னை: கரோனா சிகிச்சை பணியில் ஏற்கனவே நல்ல அனுபவம் பெற்றுள்ள மருத்துவர்களை அரசு முறையாக பயன்படுத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

doctors
doctors

By

Published : Apr 3, 2021, 6:25 AM IST

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில, "கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கடும் பணிச்சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.தொடர்ச்சியான கடும் பணிச் சுமையால் மிக மோசமான அளவிற்கு உடல் ரீதியாகவும உள ரீதியாகவும் அவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணி நியமனம் செய்திட வேண்டும்.

பயிற்சியை முடித்து சேவை செய்ய விருப்பமுடன் உள்ள இளம் மருத்துவர்களை உடனடியாக ரூ. 60,000 தொகுப்பூதியத்தில் பணி அமர்த்திட வேண்டும். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவை முடித்துக் கொடுத்திட வேண்டும்.

கரோனா சிகிச்சையில் ஏற்கனவே நல்ல அனுபவம் பெற்றுள்ள அவர்களை அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும். கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் இளம் மருத்துவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண்ணை வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும்.

படித்து முடித்த செவிலியர்களை உடனடியாக பணி நியமனம் செய்திவேண்டும். அதேபோல் மருத்துவ மாணவர்களையும் உதவித் தொகையுடன் டெல்லி அரசைப் போல் கரோனா கேர் மையங்களில் பணியில் ஈடுபடுத்தலாம். முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்திட கூடுதல் கால அவகாசம் வழங்கிட வேண்டும். கரோனா தடுப்பூசி போடும் இடங்களில் அதிகக் கூட்டம் கூடுவதும் கரோனா பரவலுக்கு காரணமாகிறது. இதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details