தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 8:09 AM IST

ETV Bharat / state

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கரோனா!

சென்னை: ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மருத்துவர்களுக்கு கரோனா உறுதி
200 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி

கரோனா தொற்று சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் படுக்கைகள் நிரம்பி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அயனாவரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஆனால், அங்கு படுக்கைகள் இல்லாததால் சென்னை ஐஐடிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு போதுமான வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details