தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய நிதிநிலை அறிக்கை : மக்கள்நல்வாழ்வுத்துறைக்கான ஒதுக்கீடுகளும் பலன்களும் - மருத்துவர் சாந்தி கருத்து!

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள், அதன் பலன்கள் குறித்து மருத்துவர் சாந்தி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

By

Published : Feb 1, 2021, 6:25 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கை
மத்திய நிதிநிலை அறிக்கை

சென்னை: 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்புசி போடுவதற்கான முழுமையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பெரும் தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலத்திலும், இந்தியாவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள போதுமான ஆய்வு மையங்கள் இல்லை. ஆய்வு மையங்களை அதிகரிக்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை. செவிலியர்களுக்கான ஆணை அமைத்தால் அதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் செய்ய வேண்டும்.

மக்கள்நலவாழ்வுத்துறைகான ஒதுக்கீடுகளும் பலன்களும் - மருத்துவர் சாந்தி கருத்து

ஒட்டுமொத்தமாக இந்த நிதிநிலை அறிக்கை பொதுமக்களுக்கு அதிக அளவில் பயன் அளிக்காத ஒரு நிதி நிலையாகவே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வரி குறித்து ஆட்சியாளர்களுக்கு வள்ளுவர் கூறுவது என்ன? குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details