தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பரின் துக்க நிகழ்வுக்கு சென்ற மருத்துவர் உயிரிழப்பு - sudden deaths

சென்னையில் நண்பரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பரின் துக்க நிகழ்வுக்கு சென்ற மருத்துவர் உயிரிழப்பு!
நண்பரின் துக்க நிகழ்வுக்கு சென்ற மருத்துவர் உயிரிழப்பு!

By

Published : Jan 30, 2023, 7:09 AM IST

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி நாராயணன் (25). இவர் கோவாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் திலீப் குமாரின் 30ஆம் நாள் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள அவரது வீட்டுக்கு நேற்று (ஜனவரி 29) சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர் பாலாஜி, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் காவல் துறையினர், உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பர்சை திருடி பர்சேஸ் செய்த அக்கா தங்கை; தொடர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

ABOUT THE AUTHOR

...view details