தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்' - திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் - dmk mp meeting resolution

தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுவதோடு, தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாக எதிரொலித்து தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

dmk mp meeting resolution
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

By

Published : Jan 26, 2021, 8:01 PM IST

Updated : Jan 26, 2021, 9:53 PM IST

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான டி.ஆர். பாலு, திமுக மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி, திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, 'திமுக சார்பில் டெல்லிக்குச் செல்லும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என்றைக்குமே தமிழ்நாடு நலனுக்காகப் பாடுபடுவதோடு - தமிழ்நாடு மக்களின் பிரச்னைகளை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாக எதிரொலித்து - தங்களுக்குள்ள ஜனநாயகக் கடமையை திறம்பட நிறைவேற்றி வந்திருப்பதை இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்ய விரும்புகிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித்திட்டத்தை புகுத்தும் நோக்கில் மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்க வேண்டும் என்ற 'வரைவு அறிக்கை' வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் 'மூன்றாவது மொழியாக மாநில மொழிகளில் ஒன்றையே கற்கலாம்' என்று புதிய வரைவுக் கல்விக் கொள்கையை திருத்த வைத்தது திமுக. அந்தக் கல்விக் கொள்கையைக் கூட ஆய்வு செய்ய 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவினை அமைத்து - அதற்கான பரிந்துரை பிரதமரிடம் கொடுக்கப்பட்டது.

ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டிற்கான இழப்பீட்டுத் தொகை, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தி, தமிழ்நாட்டின் கருத்தை அறியாமல் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்க வைத்திருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பிரதமரையே நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களுக்கான மாகாண கவுன்சில் ஒழிக்கப்படும் என்றதும் முதலில் குரல் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதன் பிறகுதான் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு மீனவர்களின் விடுதலை குறித்தும், இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்தும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி - ஆலோசனை வழங்கி விட்டு திரும்பியிருக்கிறார் என்பதை இந்தக் கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது.

'தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்'- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

மேலும், தமிழ்நாட்டு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும், புதிய மின்சாரத் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் வலிமையாக குரல் கொடுப்பார்கள். இச்சட்டங்கள் திரும்பப் பெறும் வரை கழக உறுப்பினர்களின் போராட்டம் நீடிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கரோனா தடுப்பூசி முதலில் பிரதமர் மோடி போட வேண்டும்' தயாநிதி மாறன் எம்.பி.,

Last Updated : Jan 26, 2021, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details