17வது மக்களவைத் தொகுதியின் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதில், பாஜக மட்டும் தனிப்பொரும்பான்மையுடன் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 மக்களவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதேபோன்று, இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் வெற்றிகுறித்தும், திமுக மக்கள் அளித்த ஆதவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், 'மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக கொள்ளைகளுக்கு உட்பட்டு முற்போக்கான அரசியை அவர் மேற்கொள்வார் என்று நம்பிக்கிறேன்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.