தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடா தொடர்பாக வேலுார் மாவட்டத்தைத் தவிர்த்து, புதுச்சேரியை சேர்த்து நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் 38 தொகுதிகளில் திமுகவும், 1ல் அதிமுகவும் வெற்றி பெற்றது.
பெரியார் நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை! - Periyar Thidal
சென்னை: திமுக கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கான சான்றிதழை சட்டப்பேரவைச் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, திமுக கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.