தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின் - Stalin Statement

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : May 28, 2019, 11:24 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுவதால் “ஒருகுடம் தண்ணீர் பத்து ரூபாய்” என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும்,மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்காததாலும், அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. “கமிஷன், கரெப்சன், கலெக்சன்” என்ற ஊழல் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குடிநீர் திட்டங்களிலோ, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களிலோ எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.

இந்நிலையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நிலுவையில்உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டங்களை நிறைவேற்றிடமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details