தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிப்பூர் கலவரம் : மத்திய அரசின் தோல்வியே மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் - திருச்சி சிவா! - மணிப்பூர் கலவரம் அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தன் மீது நம்பிக்கை வைக்குமாறும், மீண்டும் மாநிலத்தை அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ தெரிவித்து உள்ளார்.

Amit shah
Amit shah

By

Published : Jun 24, 2023, 10:01 PM IST

டெல்லி :வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்புமாறும், அனைத்து மாநில எதிர்க்கட்சிகள் அடங்கிய குழு பார்வையிட அனுமதிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க டெல்லியில் அனைத்து எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவா, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய திருச்சி சிவா எம்.பி, "மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைகள் குறித்து அனைத்து எதிர்க் கட்சிகளும் கவலை தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டுக் கொண்டதாக கூறினார். மேலும் மணிப்பூர் கலவரத் தடுப்பை தான் கவனித்துக் கொள்வதாகவும் தன்னை நம்புமாறும் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் மணிப்பூர் மாநிலத்திற்கு தேவையான கூடுதல் படைகளை அனுப்புமாறும், அனைத்து மாநில எதிர்க்கட்சிகள் அடங்கிய குழுவை மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்குமாறு தான் கோரியதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் நிலவுவது சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை என்பதால் காவல் துறை அல்லது ராணுவம் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நிர்வாக தோல்வியின் காரணமாக கலவரம் வெடித்து உள்ளதாக திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.

50 நாட்களுக்கும் மேலாக நீடித்து மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பினர். மணிப்பூரில் கலவர தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை தான் கவனித்து வருவதாகவும் கூறினார்.

மேலும் தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உளதுறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா. முன்னாள் மணிப்பூர் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஒக்ரம் இபோபி சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரெக் ஓ பிரையன், மேகாலயா முதல்வர் கான்ராட் சிங், பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த பினாகி மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மனோஜ் ஜா மற்றும் பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா உத்தவ் அணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :எகிப்து சென்றார் பிரதமர் மோடி! இந்திய வீரர்களின் கல்லறையில் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details