மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையை திமுக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட மும்மொழிக்கொள்கையை கடுமையாக எதிர்த்த பின்னர், மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியது. மேலும், மும்மொழிக்கொள்கை குறித்த கருத்துகளை ஜூலை 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறியது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்த திமுக! - திமுக ஆய்வுக்குழு
சென்னை: தேசிய புதிய கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள், கல்வி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என, திமுக தேசிய கல்விக் கொள்கை ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.
அறிவிப்பு விடுத்த திமுக
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஆராய 9 பேர் கொண்ட வல்லூநர் குழுவை திமுக அமைத்தது. தற்போது பொதுமக்கள், கல்வி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என திமுக தேசிய கல்விக் கொள்கை ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த குழு ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.