தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிப்.29 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்! - மு.க. ஸ்டாலின்

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

By

Published : Feb 22, 2020, 9:54 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கழகக் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு

நாடு முழுவதும் நடைபெற்றுவரும் குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினருக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் பொருட்டும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் பார்க்க: தொழில் துறை வளர்ச்சியில் 10ஆவது இடம் தருமபுரிக்குதான்! - அடித்துச் சொல்கிறார் திமுக எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details