சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வு என்பதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியை ஒன்றிய அரசு பின்பற்றவேண்டும்.
அப்படிப் பின்பற்ற வில்லை என்றால் அரசு இல்லை. தமிழ்நாட்டின் ஆளுநர் சுய காரணங்கள், வழிமுறைகளை எல்லாம் விலக்கி வைத்து விட்டு நீட் இந்த விவகாரத்தில் பொது நோக்குடன் செயல்பட வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அண்ணாமலை ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - திமுக சார்பில் நோட்டீஸ்