சென்னை: நாடாளுமன்றத்தின் 37ஆவது அலுவல் மொழிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 7) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது அமித் ஷா, "ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த முடிவு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.
ஆங்கில மொழிக்கு மாற்றார இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கலாம் என்று கூறினார். இவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.