தமிழ்நாடு சட்டபேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுகதான் வலியுறுத்திவருகிறது. அதில் தொடர்பிருந்தால் நாங்கள்தான் சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயக்குமார் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எங்களை மாட்டிவிட பார்க்கிறார்" என்றார்.