தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரக உள்ளாட்சி தேர்தல் - திமுக ஆலோசனை! - ஊரக உள்ளாட்சி தேர்தல்

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

dmk-meeting-on-rural-local-elections
dmk-meeting-on-rural-local-elections

By

Published : Sep 5, 2021, 3:50 PM IST

சென்னை :புதிதாக உருவாக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. அதன்படி, கடந்த 31ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல தொடர்பான ஆலோசனையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று(செப்.05) நடைபெற்றது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ,நாளை(செப்.6) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : 'செப்.12ஆம் தேதி 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details