கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையத்தின் 5ஆவது யூனிட்டில் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று (1.7.2020) காலை திடீரென வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
விபத்திற்கான காரணம் குறித்து அனல்மின் நிலையத்தில் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் விபத்தில் யாரேனும் காயமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அனல்மின் நிலைய முதலுதவிக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.