சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “செப்டம்பர் 9ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. அதில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் என மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
'பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும்' - ஸ்டாலின் - anna arivalaiyam
சென்னை: பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் என்ன என்பது தெரியும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
dmk leader stalin says about their party strength
காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்படவில்லை. 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் போது திமுகவின் உழைப்பு தெரியும். பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் என்ன என்பது தெரியும்” என்றார்.
முன்னதாக திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள துரைமுருகனுடன் பொதுக்குழு கூட்டம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.