சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ’இன்று டெல்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், தொலை தொடர்பு வசதியை மீண்டும் கொடுத்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் போன்றவைகளை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ப.சிதம்பரம் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - ப.சிதம்பரம் கைது
சென்னை: அரசியல் பழிவாங்கும் நோக்கத்கில் சிதம்பரம் கைது நடந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக அழைப்பை ஏற்று கலந்துகொண்ட கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சுவர் ஏறி குதித்து சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது இந்திய நாட்டிற்கே அவமானம். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிதம்பரம் கைது நடந்துள்ளது’ என்றார்.
அதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்க திமுக காரணம் இல்லை. அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர், அவர் கூறும் கருத்துக்கு பதில் அளித்து கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.