மறைந்த திமுக தலைவரின் 97 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் ஒரு தம்பதியருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.