தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்துத் துறையில் ரூ.2000 கோடி ஊழல்... திமுக பைல்ஸ் பார்ட் 2... வீடியோ வெளியிட்ட அண்ணாமலை! - பாதயாத்திரை

தி.மு.க.,வினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே பைல்ஸ் பார்ட்-2) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

dmk-files-part-2-annamalai-released-the-video-in-twitter
திமுக பைல்ஸ் பார்ட் 2... வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

By

Published : Jul 26, 2023, 7:00 PM IST

சென்னை: திமுகவில் உள்ள 11 முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பைல்ஸ்-1 என்ற தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை26) திமுக பைல்ஸ் பகுதி 2-ஐ வெளியிட்டுள்ளார்.

இதில், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக அரசுக்கு எதிராகவும், பாஜகவின் வளர்ச்சிக்காகவும் நாளை மறுநாள்(ஜூலை28) ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னையை நோக்கி ''என் மண்... என் மக்கள்'' என்ற தலைப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

திமுக பைல்ஸ்-1 வெளியான சில நாட்களில் திமுக பைல்ஸ்-2 விரைவில் வெளியாகும் என அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை, திமுகவின் சொத்துப்பட்டியல் குறித்தும் ஊழல் பட்டியல் குறித்தும் நடைபயணத்தின்போது மக்களிடம் விளக்கவும் திட்டமிட்டுள்ளார்.

திமுக பைல்ஸ் 2 வீடியோவில் முக்கியமாக மூன்று நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் குறித்து அண்ணாமலை திமுக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார். அந்த வீடியோவில், ''எல்.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் மூலம் ரூ.3000 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு கருவிகள் வாங்கியதில் ரூ. 2,000 கோடியும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகமான டி.என்.எம்.எஸ்.சி நிறுவனத்திற்கு பூச்சிகொல்லி மருந்து வாங்கியதில் ரூ. 600 கோடியும் ஊழல் நடைபெற்றுள்ளது. மொத்தம் ரூ. 5600 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். எல்.டி.எல் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்பிலான நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தது ஏன்?.

திமுகவினர் செய்துள்ள அனைத்து ஊழல்களை பாதயாத்திரையின் போது மக்களிடம் கூறுவேன். மேலும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு எங்கள் பாதயாத்திரையின்போது இதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுவோம். ஊழலில் திளைக்கும் திமுக அரசிடம் பதில் கேட்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக பைல்ஸ்-1 வெளியிடும்போது அண்ணாமலை மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் திமுக பைல்ஸ்-2க்கும் பல அவதூறு வழக்குகள் பாயும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க :"ரூ.5,600 கோடி ஊழல்" - ஆளுநரிடம் இரும்பு பெட்டியில் 'திமுக பைல்ஸ்-2' ஆவணங்களை வழங்கிய அண்ணாமலை!

ABOUT THE AUTHOR

...view details