விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தியை தேர்வு செய்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார்.
DMK Ex-Minister Ponmudi Press Meet அப்போது, “அதிமுக ஆட்சியின் அவலங்கள் மற்றும் தோல்விகளை முன்வைத்து தேர்தல் பரப்புரை மேற்கோள்வோம். புகழேந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்.
திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் விக்கிரவாண்டியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளனர். இவர்களின் முயற்சியில் நிச்சயமாக திமுக வெற்றிபெரும்” என்றார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் புகழேந்தி போட்டி: திமுக தலைமை அறிவிப்பு!