தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு: மூன்றாம் கட்ட பயணம்! - Report Preparation Committee

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் தமிழ்நாட்டிற்குத் தேவையான கோரிக்கையை அளிக்கும்படி அக்கட்சியின் தலைமை கோரிக்கைவைத்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: மூன்றாம் கட்ட பயணம்!
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: மூன்றாம் கட்ட பயணம்!

By

Published : Nov 21, 2020, 5:25 PM IST

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் குறித்தும், குழுவிடம் தங்களுக்கான கோரிக்கையை அளிக்கும்படி திமுக தலைமை கோரிக்கைவைத்துள்ளது.

இது தொர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களைச் சார்ந்த பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் - இளைஞர்கள் - விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளித்து பொதுவான பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் தெரிவிக்க கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மூன்றாம் கட்ட சுற்றுப்பயண விவரம்:

டிசம்பர்- 4 மாலை 4.00 மணி - கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு

டிசம்பர்-5 காலை 9.00 மணி - நாகை வடக்க. நாகை தெற்கு மாலை 4.00 மணி - திருவாரூர்

டிசம்பர்-6 காலை 9.00 மணி - தஞ்சை வடக்கு தஞ்சை மத்திய தஞ்சை தெற்கு மாலை 4.00 மணி - புதுக்கோட்டை வடக்கு புதுக்கோட்டை தெற்கு

டிசம்பர்-7 காலை 9.00 மணி - திருச்சி வடக்கு திருச்சி தெற்கு திருச்சி மத்தி. மாலை 4.00 மணி - அரியலூர் பெரம்பலூர்

மேற்கண்டவாறு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விவரத்தையும் - கோரிக்கை மனுக்கள் பெறும் இடத்தையும் விளம்பரம் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details