தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்த தவறையே மீண்டும் செய்யும் அரசு - டி.கே.எஸ். இளங்கோவன் - பால்,

சென்னை: கோடை காலத்தில் ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும், ஆனால் அதை செய்யாமல் அரசு மெத்தனம் காட்டிவருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றஞ்சாட்டினார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

By

Published : Aug 18, 2019, 4:47 PM IST

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், பால் விலை உயர்வு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பால், ஏழை மக்கள் உபயோகிக்கும் பொருள். அதன் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . அரசாங்கம், பாமர மக்களை கருத்தில்கொண்டு திட்டங்களை வகுக்கவேண்டும்.

ரேஷன் கடையில் அரசி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த நஷ்டத்தை அரசு தாங்கி கொள்கிறது. அரசி போல் பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஆவின் பாலை மானிய விலையில் கொடுத்து அரசாங்கம் அந்த இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டும்.

மீண்டும் செய்த தவறையே செய்யும் அரசாங்கம்-டி.கே.எஸ்.இளங்கோவன்

தொடர்ந்து பேசுகையில், கோடை காலத்தில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அதைப் பற்றிலாம் கவலைப்படாமல், செய்த தவறை மீண்டும் செய்து வருகிறது. மழை வந்தாலும், வராவிட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details