தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேப்டன் கூல்-ஐ சந்தித்த மினிஸ்டர் கூல்! - தோனியை சந்தித்த துரைமுருகன்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் கூல் கேப்டன் என அழைக்கப்படுபவருமான தோனியை தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், சட்டப்பேரவையில் கூலாக வலம் வருபவருமான அமைச்சர் துரை முருகன் டெல்லியில் சந்தித்துள்ளார்.

dmk-duraimurugan-meet-dhoni-in-delhi
கேப்டன் கூல்-ஐ சந்தித்த மினிஸ்டர் கூல்

By

Published : Jun 18, 2021, 6:28 PM IST

சென்னை: 'கிரிக்கெட்-ல எத்தனை கோல் போட்ருக்காங்கன்னு கேக்குற அளவுக்குதான் எனக்கு கிரிக்கெட்ட பத்தின புரிதல் இருந்துச்சுன்னு' ஒரு நேர்காணலில் துரைமுருகன் கூறியிருப்பார். அப்படியிருந்த அவர், ஒரு கட்டத்தில் தோனியின் தீவிர ரசிகராவே மாறினார்.

மேலும் அந்த நேர்காணலில், “கிரிக்கெட் குறித்து விஷயங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் தனக்கு கற்றுக்கொடுத்தார்” என்பார். உடனே நெறியாளர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று வினவுவார். அதற்கு, சட்டென்று தோனி என்றார் துரைமுருகன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் துரைமுருகனை தோனி சந்தித்தபோது

அணியின் கேப்டனாக இருந்து எதையும் கூலாக தோனி கையாள்வது தனக்கு மிகவும் பிடித்தது என்றும் தலைமை தாங்க கூடியவர்களுக்கு இருக்கவேண்டிய பண்பு அது என்றும் அவர் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தோனியை அவர் சந்தித்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் டி-சர்டில் தோனி தனது கையெழுத்தை இட்டு துரைமுருகனுக்கு பரிசளித்திருந்தார். தற்போது, மீண்டும் தோனியை துரைமுருகன் சந்தித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் கூலாக வலம்வரும் துரைமுருகன், கூல் கேப்டன் தோனியைச் சந்தித்திருக்கிறார் எனக் குறிப்பிட்டு அவர்கள் சந்தித்த புகைப்படத்தை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல தாபா உரிமையாளர் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details