திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரைமுருகன், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.