சென்னை:சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று(ஜன.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய ஐந்தாவது வார்டு திமுக உறுப்பினர் சொக்கலிங்கம், தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வட இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரினார்.
அவர் பேசும்போது, "அதிக எண்ணிக்கையிலான வட இந்தியத் தொழிலாளர்கள் ரயில் மூலம் சென்னை வருகின்றனர். ரயில்களில் 50 பேர் அமரும் பெட்டியில் வட இந்தியர்கள் 150 பேர் வருகின்றனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து என்ன செய்கின்றனர்? என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும்.