சென்னை:நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி 9.50 மணிக்கு சட்டப்பேரவை வந்தடைந்தார். அவருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர், சட்டப்பேரவை மாடத்தில் கூட்டம் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பு வணக்கம் என்று தமிழில் தனது அறிமுக உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி, ஆளுநர் பேச ஆரம்பித்த உடன் தமிழ்நாடு vs தமிழகம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான தமிழர் வாழ்வுரிமை கட்சி, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.