வரவிருக்கும் சட்டபேரவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் துணை பொதுச்செயலாளர் சக்திகோச் நடராஜன், தங்கவேல், தலைமை நிலையச்செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், மாநில இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், "திமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை தெரிவித்திருந்தோம். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இன்று மாலை அல்லது நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும்.
திமுக அவர்கள் தரப்பை எடுத்து கூறியுள்ளனர். உறவுகள் இருப்பதால் உரிமை உள்ளது. உரிமை இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது. எந்த சின்னத்தில் போட்டி என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பேசப்படும்" எனத் தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஏன்?- ஈஸ்வரன் விளக்கம் - dmk alliance
சென்னை: திமுகவுடன் உறவு இருப்பதால் உரிமை உள்ளது. உரிமை இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது என திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக தொகுதி பங்கீடு