தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறைந்த விலைக்கு கடத்தல் தங்கம் தருவதாக மோசடி செய்த தேமுதிக செயலாளர் - local functionary arrested for forgery case in chennai

சென்னை: மடிப்பாக்கத்தில் கடத்தல் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த தேமுதிக வட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

dmdk local functionary arrested for forgery case in chennai
dmdk local functionary arrested for forgery case in chennai

By

Published : Mar 2, 2021, 3:32 PM IST

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கக்கன் தெருவைச் சேர்ந்தவர் மேனகா(28). அதே பகுதியைச் தேமுதிக வட்டச் செயலாளரான சரத்குமார்(28), மேனகாவிடம் குறைந்த விலையில் நகை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பிய மேனகா 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது, கொடுத்த பணத்திற்கும் கூடுதலாக தங்க காசுகளை மேனகாவிடம் அளித்துள்ளார்.

இதனால் தான் கூறுவதை நம்பிய மேனகாவிடம், தனக்கு சென்னை விமான நிலையத்தில் பழக்கம் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்க நகைகளை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

அதை நம்பி மேகனா தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி, சுமார் 16 லட்ச ரூபாயை சரத்குமாரிடம் அளித்துள்ளார். ஆனால், அவர் நகையை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் மேனகா புகார் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால் மவுன்ட் துணை ஆணையரிடம் மேனகா புகார் அளித்தார்.

இதையடுத்து, புகார் மனு மீது விசாரணை நடத்திய காவல்துறையினர், சரத்குமார் பணம் வாங்கி மோசடி செய்ததை உறுதி செய்து அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details