'தொண்டர்கள் நேரில் வரவேண்டாம்..!' - கலி.பூங்குன்றன் அறிவிப்பு - health problem
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடல்நலக் குறைவால் ஓய்வில் உள்ளதால், அவரை பார்க்க தொண்டர்கள் வரவேண்டாம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கழக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் விடுத்த அறிக்கையில், ”திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் "ஆஞ்சியோ கிராம்” செய்து கொண்ட நிலையில் வீட்டில் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். பரிசோதனைக்கு பின்னர் வழக்கமான பணிகளைத் தொடரும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய தலைவர் கி.வீரமணிக்கு ஓய்வு தேவைப்படுவதால் கழகத் தோழர்களும், நண்பர்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.