இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையின் கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக் கடையில் கூட்டம் அலை மோதியது.
தி நகர் போன்று வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடைகள் நிறைந்த ஜி ஏ ரோடு பகுதியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விலை, சில்லறை விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அனைத்து வகையான துணிகள் மொத்தமாகவும் குறைந்த விலையிலும் தரத்திற்கேற்ப உயர்ரக வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.