தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Diwali 2023: தீபாவளிக்கு வீட்டை எப்படி அலங்கரிக்கலாம்.. சின்ன ஐடியா.. இதை ட்ரை பண்ணுங்க.! - தீபாவளி அலங்கார பொருட்கள்

Diwali home decoration ideas: தீபாவளி வந்துட்டாலே சின்ராச கையிலேயே புடிக்க முடியாது என்ற பாணியில் அனைவரும் பிஸியாக இருப்போம். இதற்கு இடையில் வீட்டை அலங்கரிக்கும் ப்ளானை மட்டும் கோட்டை விட்டு விடுவோம். உங்களுக்காகத்தான் இந்த தகவல்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 7:21 PM IST

சென்னை: தீபாவளிப் பண்டிகை நாட்கள் நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் அதற்கான தயாரெடுப்பு பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருவோம். வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், பலகாரங்கள் தயார் செய்ய வேண்டும், புத்தாடைகள் வாங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான வேலைகள் இருக்கும்.

இந்த வேலைகளுக்கு இடையே கடைசி நேரத்தில் உங்கள் வீட்டை மேலும் அழகாக்கி தீபாவளியை கொண்டாட தயாராவது கொஞ்சம் கடினம்தான். அதற்காக பண்டிகை நாளை ஏனோ, தானோ என கடமைக்காக கொண்டாடினால் முழுமையான மகிழ்ச்சியை பெற முடியாது. இந்நிலையில், உங்கள் வீடு மற்றும் சுற்றுபுறத்தை முன்கூட்டியே திட்டமிட்டு சுத்தம் செய்து அழகாக்குங்கள். அதற்கான சில வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டில் கோலமிடும் வழக்கம்:தமிழர்களிடையே கோலமிடும் வழக்கம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அரிசி மாவுக் கோலம், பூ கோலம், ரங்கோலிக் கோலம், விளக்குக் கோலம் உள்ளிட்ட பல கோலங்கள் இருக்கின்றன. இந்த கோலத்தை போட்டு வீட்டில் விளக்கு ஏற்றினாலே வீடே தெய்வீக மயமாக காட்சி அளிக்கும். அந்த வகையில் வீடுகளில் ஆன்றாடம் கோலமிடும் தமிழ் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தீபாவளி, திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களின்போது வீடுகளில் கோலமிடுவோம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்கள் வீட்டில் எண்ண கோலம் போடலாம் என்று இப்போதே யோசித்து வையுங்கள். வாசலில் ரங்கோலி கோலமிட்டு இரவு தீபங்களை அதனிடையே ஏற்றி வையுங்கள். அதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். வீடுகளுக்குள் இடம் இருந்தால் பூக் கோலம் போட்டு அங்கேயும் தீபங்களை ஏற்றி வையுங்கள் தெய்வீக களையும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும்.

பூக்கள் மற்றும் மா இலை தோரணம்:பூக்கள் மற்றும் மா இலைகளால் தோரணம் செய்து வீட்டின் முன்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தொங்கவிட்டவாறு அலங்காரம் செய்யுங்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் உங்கள் அலங்காரத்தை கொஞ்சம் எடுத்து காண்பிக்கும் என்றே தோன்றுகிறது. மேலும் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிற சென்டுமல்லி பூ கொண்டு கோலமிடுவது மட்டும் இன்றி தோரணங்களும் போடலாம்.

இதையும் படிங்க: அரிசி சாப்பாட்டுக்கும், உடல் எடைக்கும் சம்பந்தமே இல்ல: நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

உருளியில் தாமரைப் பூ வையுங்கள்: தாமரைப் பூ லட்சுமி தேவியின் கையில் இருப்பதை பார்த்திருப்போம். தீபாவளி நாளில் லட்சுமி தேவி வீட்டிற்குள் வந்து வறுமையை போக்கி செழிப்படையச் செய்வார் என்பது புராணம். வடமாநிலங்களில் லட்சுமி தேவியை வரவேற்று, வாசலில் இருந்து பூஜை அறைவரை காலடி கோலமிடுவது வழக்கமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை தாமரை பூவை லட்சுமி தேவிக்கு வைத்து பூஜை வழிபாடு செய்வார்கள்.

வீடுகளில் தீபாவளி இன்று உருளி பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி தாமரை பூக்களை போட்டு வையுங்கள். அது அழகையும், அதிர்ஷ்டத்தையும் தரும். களிமண், செம்பு மற்றும் வெண்கலத்தால் தயாரிக்கப்படும் உருளி பாத்திரங்கள் தென் இந்திய பாரம்பரிய பாத்திரங்களில் ஒன்று. அகலமான இந்த பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு மிதக்கும் வகையிலான மெழுகு திரியாலான தீப விளக்குகளையும் அதில் ஏற்றி வைக்கலாம்.

சீரியல் லைட் அலங்காரம்: என்னதான் விளக்கு ஏற்றி வைத்தாலும், வீடு முழுக்க ஒளிமயம் பரவ வேண்டும் என்றால் சீரியல் லைட்டுகள் இன்றியமையாத ஒன்று. ஹேஙிங் சீரியல் லைட்டுகளை வீட்டின் வெளிப்புறத்தில் தொங்கவிட்டவாறு அலங்காரம் செய்யுங்கள். அதிலும் குறிப்பாக தீபவிளக்குகளுக்கு ஏற்றவாறு கோல்டன் கலர் சீரியல் லைட்டுகளை தேர்வு செய்யுங்கள் இது உங்கள் வீட்டை மேலும் அழகானதாக மாற்றும்.

இப்போது அப்படியே கண்களை மூடி இப்படியெல்லாம் அலங்காரம் செய்யப்பட்ட உங்கள் வீட்டையும், புத்தாடையுடன் பட்டாசு வெடிக்க தயாராகி நிர்க்கும் உங்களையும், உங்கள் உறவினர்களையும் நினைத்து பாருங்கள். அவ்வளவு அழகும், மகிழ்ச்சியும் கொட்டி கிடக்கிறது அல்லவா... இதே மகிழ்ச்சியோடு இன்று முதலே வீட்டை அலங்கரிக்கும் முன்னெடுப்புக்கு தயாராகுங்கள்.

இதையும் படிங்க: Breathing exercise benefits in tamil: மூச்சு பயிற்சியில இவ்வளவு நன்மைகளா.? தெரிஞ்சுக்கோங்க.!

ABOUT THE AUTHOR

...view details