தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை - happy diwali

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி பட்டாசு விற்பனை மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Diwali crackers sale dull in chennai
Diwali crackers sale dull in chennai

By

Published : Nov 8, 2020, 7:43 PM IST

காலை சூரியன் விடிவதற்குள் சரவெடி, லட்சுமி வெடி என வேட்டுச் சத்தம் காதை பிளக்கும். வீதிகள் புகை மண்டலங்களாக காட்சியளிக்கும். அதுதான் தீபாவளி பண்டிகை தொடங்கியதற்கான அறிகுறி. சிறுவர், சிறுமியர் புத்தாடை உடுத்தி ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். குழந்தைகள் புஸ்வானம், சங்கு சக்கரத்துடன் விளையாடிக் கொண்டிருப்பர். ஆனால், இந்த ஆண்டு இதுபோன்ற மத்தாப்புக் காட்சிகளை பல இடங்களில் பார்க்க முடியுமா என தெரியாது. நிலைமை தலைகீழாக மாறி இருக்காலம்.

கரோனா பாதிப்பால் மக்கள் கையில் பணப் புழக்கம் குறைந்திருப்பது ஒருபுறம் என்றால், கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று, ஒலி என சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு அதிகரிப்பது மற்றொருபுறம். இதனால், இந்த ஆண்டு மக்கள் பட்டாசு வாங்குவது வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுசூலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என 2018-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை கடைப்பிடித்து கடந்த ஆண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த ஆண்டும் அதே நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுகமக்கள் 2 இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம்

பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் மக்கள் குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடல் மைதானம்தான் நகரில் பட்டாசு விற்பனை செய்யப்படும் முக்கிய அங்காடியாக உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பட்டாசு விற்பனை தொடங்குகிறது. கடந்த ஆண்டு இங்கு 65-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 40 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக விற்பனை 50 சதவிகிதம் வரை சரிவடையும் என வியாபாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயல் தலைவர் காஜா முகைதீன், "கரோனா பாதிப்பு காரணமாக பட்டாசு விற்பனை குறையும் என்பதால், குறைந்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே கடைகளை திறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 8 மாதங்களாக எந்தப் பண்டிகைகளும் கொண்டாடப்படாமல் இருப்பதால், தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்" என்று கூறினார்.

சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம்

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த ஆண்டு 100 சதவிகிதம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என பட்டாசு கடைக்காரர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு, பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், அவற்றில் தனியாக குறியீடுகள் வரையப்பட்டிருக்கும் என விற்பனையாளர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட சாதாரண பட்டாசுகள் தேங்கியிருந்ததால் அவை கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு விற்கப்பட்டது.

இதையும் படிங்க:காக்கியில் கை வைத்த காவி - நடவடிக்கை எடுக்காமல் பாஜக நிர்வாகி விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details