சென்னை: பால் வெச்சு பால்கோவா பண்ண முடியும் ரசம் வெச்சு ரசகுல்லா பண்ண முடியுமா?, புளி ரசத்துக்குப் புளி போடலாம் அதிரசத்துக்கு என்ன போடுறது? வெயிட், வெயிட் கண்டென்டே இனிமேதான் வருது கடுப்பாயிடாதீங்க.
தீபாவளி என்றால் பலகாரம், பட்டாசு, புத்தாடை எல்லாம் கடந்து மீம்கள்தான் தற்போது ட்ரெண்டில் உள்ளது. தீபாவளி போனஸ் முதல் பட்டாசு, பலகாரங்கள் வரை மீம்கள் கால்வைக்காதே இடமே இல்லை. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்சுகளை கலாய்க்கும் விதமாக வைரலாகி வரும் மீம்கள் சொல்லவே தேவையில்லை.. நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
90-ஸ் கிட்ஸ்களின் தீபாவளிக் கொண்டாட்டம்:இன்றைய தலைமுறை அதாவது 2 கே கிட்ஸ்சுகள் ஆன்லைன் கேம்களில் காட்டும் ஆர்வத்தை நண்பர்களோடு ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளிலோ அல்லது தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களிலோ காட்டுவது இல்லை என்றே கூறலாம்.
ஆனால் 90-ஸ் கிட்ஸ்சுகள் 50 ரூபாய்க்கும் வாங்கும் பட்டாசுகளை தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஆளுக்கு ஒன்றாக வெடித்து ஆனந்தம் கொள்வார்கள். இது ஒரு சமூக ஒன்றை உணர்வையும் வலுப்படுத்தியது என்றே கூறலாம். மேலும், ஒரு தெருவைச் சேர்ந்த 90-ஸ் கிட்ஸ்சுகள் மற்ற தெருவைச் சேர்ந்த 90-ஸ் கிட்ஸ்சுகளுடன் போட்டிப் போட்டு பட்டாசு வெடிப்பார்கள். இதையெல்லாம் இன்று காமெடியான மீம்களாக பார்க்கும்போது பால்ய வயது ஞாபகத்திற்கு வரும்.
இதையும் படிங்க:இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் எடுத்துவச்சு யூஸ் பண்றீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க.!