தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் - மாவட்ட வாரியான தகவல்! - தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு
தமிழ்நாட்டில் 7 மணி நேர நிலவரப்படி 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.
District wise voting percentage in tn today
By
Published : Apr 6, 2021, 9:35 PM IST
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்தனர்.
மாலை 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 77.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குச் சதவீதப் பட்டியல்
குறைந்தபட்ச வாக்குப்பதிவான மாவட்டங்களாக சென்னையில் 59.40 சதவீதமும், செங்கல்பட்டில் 62.77 சதவீதமும், திருநெல்வேலியில் 65.16 சதவீதமும் பதிவாகியுள்ளன.
மாவட்டம்
வாக்குப்பதிவு (விழுக்காடு)
திருவள்ளூர்
68.73
சென்னை
59.40
காஞ்சிபுரம்
69.47
வேலூர்
72.31
கிருஷ்ணகிரி
74.23
தர்மபுரி
77.23
திருவண்ணாமலை
75.63
விழுப்புரம்
75.51
சேலம்
75.33
நாமக்கல்
77.91
ஈரோடு
72.82
நீலகிரி
69.24
கோயம்புத்தூர்
66.98
திண்டுக்கல்
74.04
கரூர்
77.6
திருச்சிராப்பள்ளி
71.38
பெரம்பலூர்
71.08
கடலூர்
73.67
நாகப்பட்டினம்
69.62
திருவாரூர்
74.9
தஞ்சாவூர்
72.17
புதுக்கோட்டை
74.47
சிவகங்கை
68.49
மதுரை
68.14
தேனி
70.47
விருதுநகர்
72.52
இராமநாதபுரம்
67.16
தூத்துக்குடி
70.77
திருநெல்வேலி
65.16
கன்னியாகுமரி
68.41
அரியலூர்
77.88
திருப்பூர்
67.48
கள்ளக்குறிச்சி
78
தென்காசி
70.95
செங்கல்பட்டு
62.77
திருப்பத்தூர்
74.66
ராணிப்பேட்டை
74.36
முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கப்பெறாததால் வாக்குச் சதவீதத்தில் சற்று மாற்றங்கள் இருக்கும் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.