தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு - corona cases in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3,616 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது.

corona-cases-in-tamilnadu
corona-cases-in-tamilnadu

By

Published : Jul 7, 2020, 10:31 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 7) ஒரே நாளில் 3,616 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,203 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636ஆகவும் உள்ளது. மேலும், இன்று கரோனா வைரஸிலிருந்து 4,545 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 71 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்:

  • அரியலூர் மாவட்டம் - 475
  • செங்கல்பட்டு மாவட்டம் - 6,942
  • சென்னை மாவட்டம் - 71,230
  • கோவை மாவட்டம் - 839
  • கடலூர் மாவட்டம் - 1,342
  • தர்மபுரி மாவட்டம் - 124
  • திண்டுக்கல் மாவட்டம் - 730
  • ஈரோடு மாவட்டம் - 286
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 1,274
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 2,836
  • கன்னியாகுமரி மாவட்டம் - 757
  • கரூர் மாவட்டம் - 174
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 203
  • மதுரை மாவட்டம் - 4,674
  • நாகபட்டினம் மாவட்டம் - 314
  • நாமக்கல் மாவட்டம் - 118
  • நீலகிரி மாவட்டம் - 150
  • பெரம்பலூர் மாவட்டம் - 170
  • புதுக்கோட்டை மாவட்டம் - 418
  • ராமநாதபுரம் மாவட்டம் - 1,479
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 1,312
  • சேலம் மாவட்டம் - 1,340
  • சிவகங்கை மாவட்டம் - 576
  • தென்காசி மாவட்டம் - 530
  • தஞ்சாவூர் மாவட்டம் - 533
  • தேனி மாவட்டம் - 1,222
  • திருப்பத்தூர் மாவட்டம் - 322
  • திருவள்ளூர் மாவட்டம் - 5,205
  • திருவண்ணாமலை மாவட்டம் - 2,633
  • திருவாரூர் மாவட்டம் - 576
  • தூத்துக்குடி மாவட்டம் - 1,416
  • திருநெல்வேலி மாவட்டம் - 1,295
  • திருப்பூர் மாவட்டம் - 237
  • திருச்சி மாவட்டம் - 1,059
  • வேலூர் மாவட்டம் - 2,097
  • விழுப்புரம் மாவட்டம் - 1,233
  • விருதுநகர் மாவட்டம் - 1,228

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 448
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 376
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 421

இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை' - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details