தமிழ்நாட்டில் கரோனா நோய் தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் கோவை மாவட்டத்திற்கு முருகானந்தம், திருநெல்வேலிக்கு அபூர்வா, சேலத்திற்கு நசிமுதீன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பு கல்லோலிகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, கரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 37 மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு