தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - Chennai High Court

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டுள்ளதாக, தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dismissed petition of Challenging Jayalalitha memorial, MHC order
Dismissed petition of Challenging Jayalalitha memorial, MHC order

By

Published : Mar 5, 2021, 12:38 PM IST

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த நினைவிடம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானங்களும் எழுப்பக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள அவர், நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா நினைவிடம் கட்டத் தடை கோரிய வழக்குகளை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details