சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் அலுவலர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்பப்பெற்று, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
எனவே, இதனை எதிர்த்து அனைத்து இந்திய ஸ்டேட் வங்கி அலுவலர்கள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் வெளிநாட்டு பயணச்சலுகை திரும்பப் பெறப்பட்டுள்ளது.