சென்னை ஆவடியில், மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம் வீடுகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவடியிலிருந்து சென்னை, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் செல்லும் அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளதால், வெளியூர் நபர்கள் யாரும் ஆவடிக்குள் வரமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் திருமுல்லைவாயில், பட்டாபிராம், முத்தாள், புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட தெருக்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான காய்கறிகள் வீடுகளுக்கே சென்று வாகனங்களில் விநியோகம் செய்துவருகின்றனர்.