கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வசந்தகுமார் மறைவிற்கு இயக்குநர் சுசீந்திரன் இரங்கல் - வசந்த குமாருக்கு இரங்கல்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவிற்கு இயக்குநர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன்
அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "வீரவணக்கம், மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு கோவிட்-19ஆல் உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அவர்களுக்கு, எனது வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்.
அய்யா அவர்களை பிரிந்து வாடும் எங்கள் கலைத்துறையை சார்ந்த விஜய் வசந்த் நண்பருக்கும், தொண்டர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.