தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திரையரங்கு உரிமையாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இயக்குநர் பாரதிராஜா" - திரையரங்கு உரிமையாளர்

டெல்லி: திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக அறிவித்துள்ள செயல்திட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என, இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்

bharathi raja

By

Published : May 29, 2019, 11:31 PM IST

இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்,

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாட கூடிய ஒரு அபாயகரமான செயல்திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 விழுக்காடு வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் ,சிம்பு ,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 விழுக்காடு வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50 விழுக்காடு வசூலையும் அந்த படத்தை விநியோகம் செய்பவர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தர வேண்டுமாம். இந்த வரிகளைப் படிக்கும்போது திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்ற அச்சம் எழுகிறது.

இந்த விகிதாச்சார முறை மட்டும் அமலுக்கு வந்தால் ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்கள் வர்த்தகம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதை பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்து விட்டு அதற்குப் பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details