தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டேரியில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா - ஆய்வுசெய்ய நீதிமன்றம் உத்தரவு - Chennai High Court

சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்ட எந்த மதக் கடவுளும் கேட்பதில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஓட்டேரியில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா
ஓட்டேரியில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா

By

Published : Jul 29, 2021, 7:14 PM IST

சென்னை: ஓட்டேரி பகுதியில் நடைபாதைகள், சாலையை ஆக்கிரமித்து கோயில், கடைகள் அமைக்கப்பட்டதாகவும், அவற்றை அகற்றக் கோரியும் தேவராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், பாதசாரிகள் நடக்க முடியாத அளவிற்கு நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கோயில்களும், அதன் அருகில் அனுமதி பெறாத கடைகளும் அதிகரித்துவருவதால் ஓட்டேரி செல்லப்பா சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியதோடு அதற்கான புகைப்படங்களும் தாக்கல்செய்யப்பட்டன.

சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா?

மேலும் சென்னை உயர் நீதிமன்றம் வெளிப்பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கோயில்கூட நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டதையும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

இதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், "சாலைகளை ஆக்கிரமித்து கோயில்களைக் கட்ட வேண்டும் என எந்த மதக் கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை. ஆனாலும் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் தவறாகப் பயன்படுத்துவது மனிதன் மட்டுமே" என வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள், சாலை, நடைபாதையை ஆக்கிரமித்ததாக மனுதாரர் தெரிவிக்கும் ஓட்டேரி பகுதியில் சாலை, நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா என்பதை மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details