தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பேனர் வைப்பதை முழுமையாகத் தடைசெய்யும் வகையில் நடவடிக்கை வேண்டும்' - பேனர் வழக்கு

தமிழ்நாட்டில் பதாகை வைப்பதை முழுமையாகத் தடைசெய்யும் வகையில் உரிய நடவடிக்கை வகுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai news  chennai latest news  chennai highcourt  highcourt  court news  chennai high court order to tamil nadu government  banners  banners not eruct  பேனர்கள் அகற்ற நடவடிக்கை  தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர்நீதிமன்றம்  பேனர் வழக்கு  பேனர்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Oct 5, 2021, 2:09 PM IST

சென்னை: விழுப்புரத்தில் பொன்குமார் என்பவரதுஇல்லத் திருமணத்திற்கு வருகைபுரிந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டவிரோதமாக பதாகைகள், கொடிக் கம்பங்கள் வைப்பதை முழுவதுமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

குற்றச்சாட்டுகள்

இவ்வழக்கானது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, இந்தக் கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில் திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இழப்பீடு

இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் 12 வயது சிறுவனைப் பணியில் அமர்த்தியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்குத் தற்காலிகமாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து 2019ஆம் ஆண்டே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளதாகவும், கட்சித் தொண்டர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தான் சென்றபோது ஏராளமான பேனர்களைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேனர்கள் வைப்பது முழுமையாகத் தடைசெய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்வழக்கு தொடர்பாக திமுக அரசு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பா? - சு. வெங்கடேசன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details